அதிர்ச்சி! உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு 47 கோடியை கடந்தது!

0
127

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு உருவான நோய் தொற்று பரவ தற்போது 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் தடுப்பூசிகள் மிக வேகமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசியின் தாக்கம் காரணமாக, இந்தியாவில் வெகுவாக நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், உலகளவில் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,73,00000 என அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 41,2600000 பேர் குணமடைந்திருக்கிறார்கள் ஆனாலும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரை 61,32,000 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் 29,306 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் நோய்த்தொற்று பாதிப்பால் 543 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஒரே நாளில் தென்கொரியாவில் 3,095000 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.