Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீனாவில் புழு மழையா? அச்சத்தில் மக்கள்!!

Worm rain in China? People in fear!!

Worm rain in China? People in fear!!

சீனாவில் புழு மழையா? அச்சத்தில் மக்கள்!!

சீனா தலைநகரான பீஜிங்கில் அண்மையில் மழை பொழிந்ததாகவும், மழையுடன் சேர்ந்து புழுக்களும் விழுந்ததாக அண்மையில் சமூக வலைத் தளங்களில் வீடியோக்கள் பரவலாக பரவியது. மேலும் அந்த வீடியோவில் பொதுமக்கள் தங்கள் மீது புழுக்கள் விழாதவாறு குடை பிடித்தப்படியே செல்கின்றனர்.

மேலும் சாலையோர கார்களிலும்,  நீர்நிலைகளிலும் மழையுடன் சேர்ந்து புழுக்களும் விழுந்ததாக வீடியோக்கள் பரவலாக வெளியானது. இதுகுறித்து சீனா அரசாங்கம் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சீனா பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், புழு மழை என்ற தகவல் போலியானது என்றும், பீஜிங் நகரில் எந்த ஒரு மழை பொழிவும் பதிவாகவில்லை என்றும் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்று கூறினார்.

Exit mobile version