Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

IRREGULAR PERIODS பற்றிய கவலையா? 2 கிளாஸ் தண்ணீரில் இந்த பொடியை கொதிக்க வச்சி குடிங்க!!

இன்றைய கால வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டுவிட்டது.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தால் தற்பொழுது 10,11 வயதிலேயே சிறுமிகள் பூப்படைந்து விடுகிறார்கள்.பூப்படைந்த பிறகு ஒவ்வொரு 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சியை சந்திக்கிறார்கள்.

மாதவிடாய் காலத்தில் கருப்பையில் உள்ள கருமுட்டை உடைந்து உதிரமாக பிறப்புறுப்பில் வெளியேறும்.இந்த ,மாதவிடாய் நிகழ்வு குறைந்த பட்சம் 2 முதல் அதிகபட்சம் 7 தினங்கள் வரை நீடிக்கும்.

இந்த மாதவிடாய் சுழற்சி முறையாக நடந்தால் மட்டுமே கருப்பை ஆரோக்கியம் சீராக இருக்கிறது என்று அர்த்தம்.ஆனால் இன்று பெரும்பாலான பெண்கள் முறையற்ற மாதவிடாயால் அவதியடைந்து வருகின்றனர்.

சில பெண்களுக்கு மாதம் கடந்தாலும் மாதவிடாய் வருவதில்லை.இந்த சீரற்ற மாதவிடாய் சுழற்சியால் அவதியடைந்து வருபவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றினால் பலன் கிடைக்கும்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை:

*வயிற்று வலி
*உடல் சோர்வு
*மன அழுத்தம்
*கோபம்
*தலைவலி
*சரும பருக்கள்

மாதவிடாய் பாதிப்பை சரி செய்யும் வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை துண்டுகள் – ஒரு கப்
2)ஓமம் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – இரண்டு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை வெயிலில் பரப்பி வத்தல் பதத்திற்கு காய வைத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு இந்த பிரண்டை துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பிரண்டை பொடி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

**அடுத்து அதில் அரை தேக்கரண்டி ஓம விதை போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இரண்டு கிளாஸ் தண்ணீர் சுண்டி ஒரு கிளாஸாக வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

**இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்றுவேளை பருகினால் பல மாதங்களாக வர மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரு நாளில் தீர்வு கிடைக்கும்.

Exit mobile version