அல்சர் பிரச்சனையால் கவலையா!! ஒரே வாரத்தில் குணமாக்கும் எளிய பாட்டி வைத்தியம்!!

0
161
worried-about-ulcer-problem-a-simple-granny-remedy-that-cures-in-one-week

அல்சர் பிரச்சனையால் கவலையா!! ஒரே வாரத்தில் குணமாக்கும் எளிய பாட்டி வைத்தியம்!!

வயிற்றுப் பகுதியில் உருவாகும் புண்ணை அல்சர் என்கிறோம். இவை காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படுகிறது. மன உளைச்சல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், அதிகம் டீ, காபி குடித்தல், காரமான மசாலா உணவுகளை சாப்பிடுதல் போன்றவற்றாலும் ஏற்படுகிறது.

வயிற்றில் அல்சர் பாதிப்பு ஏற்பட்டால் வாய் பகுதியில் புண்கள் உருவாகும். இதை குணமாக்க தேங்காய் பாலில் சில பொருட்களை சேர்த்து குடிப்பது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய்
*பாதாம்
*முந்திரி
*பிஸ்தா
*சப்ஜா விதை
*கற்கண்டு
*உலர் திராட்சை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 5 பாதாம் பருப்பு, 5 முந்திரி பருப்பு, 10 உலர் திராட்சை, 5 பிஸ்தா போட்டு தண்ணீர் ஊற்றி 10 மணி நேரம் ஊற வைக்கவும்.

அதேபோல் ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி சப்ஜா விதை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் சிறிது கற்கண்டு போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு கப் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

தேங்காய் வேஸ்ட்டை மீண்டும் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். இதை தேங்காய் பால் வடிகட்டிய பாத்திரத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து ஊறவைத்த பாதாம், முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு தேங்காய் தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை தேங்காய் பாலில் சேர்த்து கலக்கவும். அடுத்து ஊறவைத்த சப்ஜா விதை, கற்கண்டு பொடி சேர்த்து நன்கு கலக்கி குடிக்கவும். இவ்வாறு செய்து குடித்து வந்தால் அல்சர், குடல் புண், வாய்ப்புண் முழுமையாக குணமாகும்.