Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று இந்த ஒரு பூஜையை செய்தால் ஆயுசுக்கும் பணம் அல்ல அல்ல குறையாது!!

பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் வருகின்ற பணத்தை விட செலவு அதிகமாக இருக்கிறது,என்றும் பணம் வருவதும் தெரியவில்லை செலவாகுவதும் தெரியவில்லை என்றும் புலம்பும் வீடுகள் நிறைய இருக்கும்.இந்த பிரச்சனைகளை நீக்க உங்கள் வீட்டில் வருடத்திற்கு ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை ஒரே ஒரு முறை செய்தால் போதும்.வருடம் முழுவதும் பணம் எடுக்க எடுக்க குறையாது.

வெள்ளிக்கிழமை நாளன்று அதிகாலை எழுந்தவுடன் தலையுடன் நீராடி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.அதாவது ஒரு வெள்ளி அல்லது செம்பு சொம்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.அதன் வெளிப்புறத்தில் மஞ்சள் பூசி ஒற்றைப்படையில் குங்குமம் வைக்க வேண்டும்.

குங்குமம் வைத்த பின்னர் அந்த சோம்பினுல் தூய்மையான நிறை சொம்பு நீரூற்றி அந்த நீரில் சிறிதளவு மஞ்சள், குங்குமம், அர்ச்சனை அரிசி, மற்றும் சிறிதளவு துளசி ஆகியவற்றை போட்டு,வீட்டிலுள்ள அனைவரும் அதனுள் வேண்டிக்கொண்டு சில்லறை காசை போடவேண்டும்.சொம்பில் போடும்பொழுது பணம் அல்ல அல்ல குறையக்கூடாது என்று வேண்டுதலை முன்வைத்து போட வேண்டும்.சில்லரை காசை போட்ட பிறகு அந்த சொம்பை பூவால் அலங்கரித்து வெற்றிலையில் மஞ்சள், குங்குமம், அர்ச்சனை அரிசியிட்டு,அதன் மீது இந்த செம்பினை வைத்து விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.இந்தப் பூஜை அதிகாலை சூரியன் வருவதற்கு முன்பு செய்ய வேண்டும்.இப்படி விளக்கேற்றி பூஜை செய்யும்பொழுது “ஓம் ஸ்ரி மஹா லட்சுமியே நமஹா”என்ற மந்திரத்தை ஜபித்து நீங்கள் பூஜை செய்ய வேண்டும்.இவ்வாறு செய்யும்பொழுது மகாலட்சுமியே அந்த சொம்பில் எழுந்தருளச் செய்வாள்.இவ்வாறு பூஜை செய்து விட்டு நாள் முழுவதும் அந்த சொம்பை அப்படியே விட்டு விட வேண்டும்.அடுத்தநாள் அந்த சொம்பில் உள்ள நீரை கால் மிதி படாத இடத்தில் ஊற்றிவிட்டு அதில் இருக்கும் காசை பத்திரமாக எடுத்து உங்கள் பண பெட்டியினுள் போட்டு வைக்கவேண்டும்.பின்பு பாருங்கள் உங்கள் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்.

Exit mobile version