Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று மகாலட்சுமி பஞ்சமி:! வரலட்சுமி விரதத்தை விட பல மடங்கு பலன் தரக்கூடிய நாள்! விளக்கேற்றினாலே போதும்!

இன்று மகாலட்சுமி பஞ்சமி:! வரலட்சுமி விரதத்தை விட பல மடங்கு பலன் தரக்கூடிய நாள்! விளக்கேற்றினாலே போதும்

பொதுவா மகாலட்சுமியை நாம் வழிபடுவதற்கு உகந்த காலங்களை ஒவ்வொரு மாதத்திலும் சில காலங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.அந்தப் பட்டியலில் இன்று வரக்கூடிய
மகாலட்சுமி பஞ்சமி நாளை நாம் வழிபட்டால்,வரலட்சுமி விரதத்தை காட்டிலும் பல மடங்கு அதிக சக்தியை தரவல்லது.

வளர்பிறை பஞ்சமியாகிய இன்று விரதத்தை ஆரம்பித்து நான்கு நாட்கள்,விரதமிருந்து அஷ்ட லட்சுமியை வழிபட வேண்டும்.இந்த விரதத்தை எவ்வாறு மேற்கொள்வது என்ன செய்ய வேண்டும் என்பதனை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வழிபாட்டு முறை:

அஷ்டமி பஞ்சமி நாளில் செய்யக்கூடிய இந்த பூஜையானது மிக மிக எளிய பூஜை வழிமுறையாகும்.

இன்று மாலை 6 மணிக்கு மேல் மகாலட்சுமியின் படத்திற்கு குங்குமம் பொட்டு வைத்து மலர் சூடி,பசும் பாலுடன் சிறிதளவு சர்க்கரையை கலந்து நெய்வேத்தியமாக படைத்து,தாமரை மலர் அல்லது குங்குமம் போன்றவற்றால் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து நாம் வழிபட்டு வந்தோமேயானால் அஷ்டலட்சுமிகளும் நம் வீட்டில் குடிபுகுவாள் என்பதில் ஐயமில்லை.

குடும்பத்தில் தொடர்ந்து வறுமை ஏற்பட்டு கொண்டிருப்பவர்கள் இந்த நான்கு நாட்களில் ஏதாவது ஒரு வேளை உணவை சாப்பிடாமல் இருந்து மாலையில் விளக்கேற்றி அந்த மகாலட்சுமி தாயை வணங்கி வந்தாள் கடன் பிரச்சினைகள் விரைவில் நீங்கும் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும்.

மகாலட்சுமி பஞ்சமி அன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்!

மாங்கல்ய பாக்கியம் பலமடங்கு பெருகும்.

வறுமை,கடன் பிரச்சனை நீங்கி உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும்.

தனலட்சுமி உங்கள் வீட்டில் குடிபுகுந்து,உணவு பஞ்சத்தை அறவே நீக்குவாள்.

புத்திர பாக்கியம் விரைவில் கிட்டும்.

கணவன்மார்களுக்கு ஏற்பட்ட நாள்பட்ட நோய்களை தீர்க்க மனைவிமார்கள் இந்த நாளில் விளக்கு ஏற்றி
வழிபட்டோமேயானால் அவர்கள் ஆயுள் நீடிக்கும் நோய் விடுபடுவர்.

Exit mobile version