குழந்தை பாக்கியம் கொடுக்கும் அம்மன் வழிபாடு!

0
464
#image_title

குழந்தை பாக்கியம் கொடுக்கும் அம்மன் வழிபாடு!

தற்காலத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகளவில் உள்ளது. மாறிய வாழ்க்கைமுறையால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் தம்பதிகள் குழந்தைப்பேறு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இது ஆண், பெண் இருவரிடமும் குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்சனை இருந்தால் ஏற்படக் கூடிய ஒன்றாகும்.

ஆனால் சிலருக்கு உடலளவில் குழந்தை பெற்றுக் கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.. இருந்த போதிலும் குழந்தைப்பேறு தள்ளிப் போகும்.

இவ்வாறு இருப்பவர்கள் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

அம்மன் வழிபாடு…

தங்களுக்கு விருப்பமான அம்மன் படத்தை எடுத்து மஞ்சள் கலந்த நீரில் துடைத்து வீட்டு பூஜை அறையில் வைக்கவும். அடுத்து அம்மனுக்கு உகந்த ஏதாவது ஒரு நெய்வேத்தியம் படைக்கவும்.

அடுத்து அம்மன் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்கவும். பிறகு ஒரு கிண்ணம் நிறைய பச்சரிசி எடுத்து அதில் சிறிது மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்யவும்.

குழந்தை பாக்கியம் கிடைக்க மனதார வேண்டிக் கொள்ளவும். அடுத்து அம்மனுக்கு கற்பூர தீபம் காட்டி பரிகாரத்தை நிறைவு செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர அம்மன் மனம் குளிர்ந்து நிச்சயம் குழந்தை பாக்கியம் கொடுப்பார்.