Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளிக்கிழமை அன்று இந்த தெய்வத்தை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் பெருகும்!

வெள்ளிக்கிழமை என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரு சிறப்பான நாளாகும்.பெண்கள் தனக்காக மட்டுமின்றி தனது குடும்பத்திற்காகவும், தனது பிள்ளைகளுக்காகவும், தனது கணவனுக்காவும் வாரத்தின் ஏதோ ஒரு நாளில் விரதமிருந்து தெய்வத்தை வழிபாடு செய்வார்கள்.

தன் கணவனுக்காக மாங்கல்ய பாக்கியம் பெற வேண்டும் என்று வழிபாடு செய்யும் பெண்கள் இந்த தெய்வத்தை வழிபட்டு வந்தால் உங்கள் கணவனின் ஆயிலும் அவரது உடல்நலமும் பெருகும் என்று ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது.

வெள்ளிக்கிழமையில் காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்றி தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்யம் செய்யது வந்தால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

Exit mobile version