Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொல்லியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு படிக்க விரும்புவர்களா நீங்கள்:? இது உங்களுக்கான பதிவு! விண்ணப்பிக்க கடைசிதேதி?

2020-2021ஆம் சண்டைக்கான புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட ஈராண்டு கால முழுநேர தொல்லியல் முதுநிலை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்?

முதுநிலை பொறியியல்,முதுகலைப் பட்டம் பெற்றவர்,முதுநிலை அறிவியல் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் இந்த தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தத் துறையில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரம் கல்வி உதவி தொகையாக வழங்கப்படும்.இந்த பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnarch.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யதுக் கொள்லாம். விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 25 மாலை 5 மணி வரை மட்டுமே.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600008, தொலைபேசி எண்-044-28190020, மின்னஞ்சல் – [email protected] சந்தேகங்களுக்கு இந்த தொலைபேசி எண் மற்றும் இமெயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Exit mobile version