உடனடியாக கருப்பு முகம் வெள்ளையாக மாற இதை மட்டும் தடவினால் போதும்

0
442
#image_title

உடனடியாக கருப்பு முகம் வெள்ளையாக மாற இதை மட்டும் தடவினால் போதும்

காபி குடித்தால் நம்முடைய மனம் புத்துணர்ச்சி அடைவது போலையே காபி பொடியை நமது முகத்திற்கு பயன்படுத்தினால் நம்முடைய சருமம் புத்துணர்ச்சி பெறும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம் காபி பொடியை பல்வேறு விதமான சருமப் பிரச்சனைகளைக்கு பயன்படுத்தலாம். நம்ப முடியாத அளவுக்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் காபி பொடியை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

காபி ஸ்க்ரப்

காபி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுவது மட்டுமில்லாமல் பல சரும பிரச்சனைகளுக்கும் தீர்வாக இது உள்ளது. இருந்தாலும் காபியை ஸ்க்ரப்பாக பயன்படுத்தும் பொழுது சருமத்திற்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றது.

காபியை ஸ்க்ரப்பாக பயன்படுத்தும் பொழுது காபியானது சூரியக் கதிர்களினால் முகத்தில் ஏற்பட்ட சன் டேனை சரி செய்கிறது. காபியை ஸ்க்ரப்பாக பயன்படுத்தும் பொழுது சருமத்தில் உள்ள தடிப்புகள், வீக்கம் போன்றவற்றை சரிசெய்யும். காபியை ஸ்க்ரப்பாக பயன்படுத்தும் பொழுது சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்து இறந்த செல்களை நீக்க உதவி செய்கிறது.

காபி சருமத்துக்கான சூப்பர் ஃபுட்

குளிர் காலங்களில் குளிர் அதிகமாக இருக்கும் பொழுது வீசப்படும் வறண்ட காற்றானது நமது சருமத்தை மேலும் வறட்சியாக்கும். அப்பொழுது சருமம் வறண்டு போகாமல் இருக்க காபி தூள் உதவி செய்யும்.

காபி பொடியை குளிர்காலத்தில் சருமத்திற்கு பயன்படுத்தினால் காபி தூள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமம் அதிக அளவு நீரேற்றத்துடனும் பொலிவுடனும் இருக்க உதவி செய்கிறது.

காபி செல்லுலாய்டுகளை குறைக்கும்

உடல் பருமன், பிரசவம், தைராய்டு, ஹார்மோன் மாற்றம் போன்ற பல காரணங்களால் நம்முடைய சருமத்தில் செல்லுலாய்டுகள் தலும்புகளாக மாறி சரும அழகையே மாற்றிவிடும். இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் செல்லுலாய்டுகளை குறைக்க காபி உதவியாக இருக்கும்.

நம்முடைய சருமத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்றாக சுவாசிக்கும் பொழுது செல்லுலாய்டுகள் சருமத்தில் குறையத் தொடங்கும். சருமததில் செல்லுலாய்டுகள் குறையும் பொழுது சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

வாரத்தில் இரண்டு முறை காபிதூளில் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் செல்லுலாய்டுகள் பிரச்சனைகள் இருக்காது.

காபி வயதான தோற்றத்திற்கு எதிரி

காபித்தூள் வயதான தோற்றத்திற்கு எதிரி என்று கருத்தப்படுகிறது. அதாவது காபி தூள் சருமப் பிரச்சனைகளை போக்கி விரைவாக வயதாகும் பண்பை குறைக்கிறது.

சூரியக் கதிர் வீச்சுகளால் ஏற்படும் பிக்மென்டேசன், கரும்புள்ளிகள், சன் டேன், சருமத் தடிப்புகள் போன்றவை சருமத்தில் வயதான தோற்றத்தை விரைவாக ஏற்படுத்துகிறது.

காபி தூளை நேரடியாக சருமத்தில் அப்ளை செய்வதன் மூலமாக இந்த சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அது மாதிரியே பிளாக் காபி குடிப்பதன் மூலமாக சருமத்தில் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகரிக்காமல் இருக்கும்

காபி சருமப் புற்றுநோயை தடுக்கும் காரணி

சருமப் புற்றுநோயை தடுக்கும் காரணியாக காபி இருக்கிறது. காபியில் வைட்டமின் பி3 அதாவது நியாசின் அதிக அளவில் உள்ளது. காபியில் டிரைக்கோனலின் எனப்படும் மூலக்கூறானது உடைக்கப்பட்டு பின்னர் இது நியாசினாக மாற்றம் அடைந்து விடுகிறது. இந்த மாற்றம் குறிப்பாக வறுத்த காபி கொட்டையில் நடைபெறுகிறது. இந்த நியாசின் மெலனோமா என்று அழைக்கப்படும் சருமப் புற்றுநோயை வராமல் தடுக்க உதவுகிறது.

சரும வறட்சி மற்றும் வீக்கத்திற்கான தீர்வு

காபி தூள் நமது சருமத்தில் ஏற்படும் வறட்சியையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. காபியில் உள்ள காஃபைன் எனும் மூலக்கூறு சருமத்தில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது. தோல் வீக்கத்தை அடிக்கடி சந்தித்தால் காபி பூஸ்ட் என்பதை பயன்படுத்த வேண்டும்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காஃபைன்

காபி தூளில் உள்ள காஃபைன் ஒரு நல்ல எக்ஸ்போலியேட்டராக செயல்பட்டு நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது. சருமத்தில் காஃபைன் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வது மூலமாக திசுக்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பருக்கள் கரும்புள்ளிகளை போக்கும் காபி

நமது சருமத்தில் பருக்கள் ஏற்படுவதற்கு அதிக காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதில் அதிக அளவில் சீபம் சுரப்பது, பாக்டீரியாக்களின் தொற்று ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்கிறது. இந்த பாக்டீரியாக்களால் ஏற்படும் ஆபத்தை குறைக்க காபி உதவி செய்கிறது.

காபி தூளில் இருக்கும் ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியா பண்புகள் சருமத்தில் ஏற்படும் பருக்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டுள்ளது. காபியானது கண்களை சுற்றி ஏற்படும் கருவளையத்தை போக்கவும் உதவி செய்கிறது.

அரை டிஸ்பூன் காபி தூளுடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் இரண்டு துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கருவளையம் உள்ள இடங்களை சுற்றி அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் கருவளையம் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

காபியை எப்படியெல்லாம் பயன்படுத்துவது?

காபி தூளை வெறும் தண்ணீரில் கலந்து அப்ளை செய்யலாம்.

நமது சருமம் ஒரு குழந்தையின் சருமம் போல மாற வேண்டும் என்றால் காபி தூளை பாலில் கலந்து முகத்திற்கு அப்ளை செய்யலாம்.

டல்லாக இருக்கும் முகத்தை பளபளப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் மாற்ற வேண்டுமென்றால் காபி தூளுடன் சிறிது மஞ்சள் மற்றும் தயிர் கலந்து பயன்படுத்தலாம்.

முகத்தில் நிறம் மாறுபாடு, சன் டேன், கழுத்து கருமை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் காபி பொடியுடன் எலுமிச்சை சாறு கலந்து அதை அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

சருமத்தில் அரிப்பு, அழற்சி, தடிப்பு போன்றவைகள் இருந்தால் காபி பொடியை கற்றாழை ஜெல்லுடன் கலந்து பயன்படுத்தலாம்.

நமது கண்களுக்கு கீழ் கருவளையம் அதிகமாக இருந்தால் காபி பொடியுடன் ரோஸ் வாட்டர் அல்லது வெள்ளரிக்காய் சாறு கலந்து பயன்படுத்தலாம்.

முகத்தில் பிக்மென்டேஷன் அதிக அளவு உள்ளவர்கள் காபி பொடியுடன் தக்காளி சாறு, வெள்ளரி சாறு, உருளைக்கிழங்கு சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து பயன்படுத்தலாம்.