ஆஹா!!! மாலை நேர டீ-வுடன் சுவையான போண்டா! தோசை மாவு இருந்தால் போதும் உடனே ரெடி!

0
180
Wow!!! Delicious Bonda with evening tea! All you need is dosa flour and it's ready!

ஆஹா!!! மாலை நேர டீ-வுடன் சுவையான போண்டா! தோசை மாவு இருந்தால் போதும் உடனே ரெடி!

அந்தி சாயும் மாலை வேளையில் சூடான டீ உடன் சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிடும் சுகம் அலாதியானது.சதாரண இட்லி தோசை மாவு இருக்கா, அப்போ டீ போடும் நேரத்தில் சுவையான போண்டா மற்றும் சட்னி ரெடி

தேவையான பொருட்கள் :

போண்டா :

இட்லி மாவு – 2 கப்

வரமிளகாய் – 4

பூண்டு – 2 பல்

அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி

ரவை – 1 மேசைக்கரண்டி

வெங்காயம் – 2

சட்னி அரைக்க :

வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி

வறுகடலை – 1 மேசைக்கரண்டி

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 3

வரமிளகாய் – 2

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

இரண்டு கப் புளித்த இட்லி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். அத்துடன் அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்து தனியே எடுத்து வைக்கவும் .வரமிளகாயை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து,பின் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். விழுதை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும், சிறிது நேரம் இதை அப்படியே வையுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம்  சிறிது வதங்கியதும் அதில் உப்பு சேர்த்து மாவில் கலந்து கொள்ளவும்.

ரவை மற்றும் அரிசி மாவு நன்றாக ஊறி கலவை சரியான பதத்திற்கு இரு‌க்கு‌ம்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போட வேண்டும். பின்னர் நுரை அடங்கி சிவந்து வந்ததும் எடுத்து விடுங்கள். சுவையான குட்டி போண்டா ரெடி…. டீ உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

இனி சட்னி தயார் செய்யலாம்

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வேர்க்கடலை வறுத்து எடுக்கவும், தக்காளி, பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கவும். வதக்கிய பின்னர் மிக்ஸியில் சேர்த்து அத்துடன் வறுகடலை, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.சிறிது எண்ணெய் கடுகு தாளித்து கருவேப்பிலை சேர்த்து சட்னியுடன் கலந்து பறிமாறவும்.