நாம் பிரியாணியில் சேர்க்கும் வாசனை நிறைந்த பொருள் புதினா.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூட்டு வலி,நரம்பு வலி,தசை வலி,தலைவலி போன்ற பல நோய்களுக்கு இந்த புதினா இலை அருமருந்தாக திகழ்கிறது.புதினா சாறு,புதினா டீ,புதினா மாத்திரை என்று இதை பல வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.
புதினா இலை மாதவிடாய்,வாய் துர்நாற்றம்,செரிமான பிரச்சனை போன்றவற்றிற்கு அருமருந்தாகும்.இந்த புதினா கீரை வாய் துர்நாற்றத்தை போக்கும் மவுத் வாஷராக பயன்படுகிறது.இந்த புதினாவை காயவைத்து எண்ணெய் செய்து வயிறு தொடர்பான பாதிப்புகளை குணமாக்க பயன்படுத்தலாம்.
நீண்ட நாட்களாக மலக் குடலில் தேங்கிய கழிவுகளை அகற்ற வெதுவெதுப்பான நீரில் புதினா எண்ணெய் கலந்து அருந்தலாம்.குடல் நோய்களுக்கு புதினா சிறந்த தீர்வாக இருக்கிறது.புதினாவில் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இன்று பலர் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.இதற்கு புதினா இலையில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் பெரிதும் உதவுகிறது.சளி,இருமல் போன்ற பருவகால நோய்களை குணமாக்க புதினா இலையில் டீ செய்து குடிக்கலாம்.
உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள தினமும் ஒரு கிளாஸ் புதினா தேநீர் அருந்தலாம்.புதினா இலையை அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள்,கரும் புள்ளிகள் அனைத்தும் நீங்கும்.நுரையீரல் தொடர்பான பாதிப்புகள்,ஆஸ்துமா குணமாக புதினா இலை சாறு அருந்தலாம்.புதினா கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு,ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.