Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Wow!! So Cuteeeu!! வைரலாகும் ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்!

ராஷ்மிகா மந்தண்ணா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சிறுவயது புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. இவர் பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் 2016-ம் ஆண்டு நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

 

இவர் நடித்து வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார்.. இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

 

இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் மற்றும் இவரது சிரிப்பும் வெகுளித்தனமும், க்யூட்டான பாவனைகளும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகிவருகிறது. இணையத்தளத்தில் இவரால் வெளியிடப்படும் இவரது புகைப்படங்கள் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.அவர், சோஷியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.

 

 

தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தியுடன் இவர் நடித்த சுல்தான் திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு ஆதரவுடன் வெற்றி நடை போடுகிறது.

 

இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மிகவும் க்யூட்டாக உள்ளது என்று ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டி தள்ளி வருகின்றனர்.

 

தனது சிறுவயது படத்தை வெளியிட்டு waiting for dearest Corona to leave like என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

ராஷ்மிகா தற்போது அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்திலும், சர்வானந்துடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர இரு இந்திப் படங்களிலும் நடிக்கிறார்.

 

 

 

Exit mobile version