Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐயோ என்ன ஒரு புத்திசாலித்தனம் ! இந்த வயசுல இது தேவையா! மூதாட்டியின் கைவரிசை!!!

ஐயோ என்ன ஒரு புத்திசாலித்தனம் ! இந்த வயசுல இது தேவையா! மூதாட்டியின் கைவரிசை!!!

திருட்டில் மிக சிறந்த திருட்டாக இந்த மூதாட்டிகள்  பண்ணிய திருட்டு தான்  சொல்லி சலிக்கவே முடியாது .நாமக்கல் மாவட்டம் பள்ளியப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்  தான் செந்தில்குமார்.

இவர் அதே பகுதியில் ஒரு ஜவுளி வியாபாரகடை  நடத்தி வந்தார். மதியம் சாப்பிடுவதற்காக அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றார். கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் மட்டும் இருந்தார்.

அந்நிலையில் கடைக்குள் வந்த அறுபது வயது மதிக்கக்தக்க மூன்று மூதாட்டிகள் மற்றும் ஒரு முதியவர் என நான்கு பேர் உள்ளே வந்தார்கள் ,ஒரு மூதாட்டி மட்டும்  துணி வாங்குவது போல் எல்லா இடத்திலும் சுத்தி நோட்டமிட்டு கொண்டிருந்தார்.

மீதி இருக்கும்  மூவர் கடையில் வேலை பார்க்கும் பெண்ணிடம் பேச்சி வார்த்தை நடத்தி துணிகளை விரித்து காட்டும் படி சில துணிகளை எடுத்து  அவரின் கவனத்தை திசை திருப்பிகொண்டிருந்தனர்.

அவ்வேளையில் நோட்டம் போட்டு கொண்டிருந்தத மூதாட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்டன் சேலைகளை தொட்டு பார்த்தும்  கவரும் வகையில் உள்ள சேலைகள் , விலை உயர்ந்த சேலைகளை அடுக்கில் இருந்து எடுத்து ஒன்றாக ஒரு இடத்தில் போட்டு அதன் மீது அவர் அமர்ந்தார்,யாரும் கண்காணிக்கவில்லை  என அறிந்த மூதாட்டி  தான் அணிதிருந்த உள்ளாடையில் மறைத்து சென்றார்.

பின்னர் வேலை செய்யும் பெண்ணிடம்  நூற்று  ஐம்பது ரூபாய்க்கு மூன்று துண்டுகளை மட்டுமே வாங்கி வெளியேறினார்கள்.பின்னர் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சேலைகள் குறைவாக இருக்கிறது என அதிர்ச்சி அடைந்த வேலை செய்யும் பெண், கடை முதலாளியிடம் கூறினார்.

அப்போது சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது மிக நூதனமானமுறையில் மூதாட்டியர்கள் திருடி சென்றது  தெரியவந்தது .சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டப்பகலில் இந்த  திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version