இந்த மாதம் டொனல்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் அவர் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பீதியை கிளப்பும் அளவிற்கு சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நிறுத்த பல்வேறு வகையான திட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். அதிலும் முக்கியமாக ஹெச் 1 பி விசா திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்
இந்த மாற்றம் குறித்து மேலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் டிரம்ப் கட்சியில் முன்வைக்கப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் இந்தியர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து விசா குறித்து பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது.
நியூசிலாந்து சம்பளம் மற்றும் அனுபவம் போன்ற முக்கியமான விஷயங்களில் பல்வேறு வகையான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது தொழிலாளர்களுக்கு தேவை அடிப்படையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் பணி அனுபவத்தை 3 ஆண்டுகளிலிருந்து 2 ஆண்டாக குறைத்துள்ளது. இது குறிப்பாக வேலை தேடும் இந்திய புலம்பெயர் பயந்தவர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நியுசிலாந்தில் அதிக அனுபவம் உள்ள தொழிலாளர்கள் 3 ஆண்டுகள் நியூசிலாந்து வந்து செல்ல விசாவை பெறலாம். குறைந்த அனுபம் கொண்ட தொழிலாளர்கள் 7 மாதங்கள் வரை விசா பெறலாம். மேலும் AEWV மற்றும் SPWV விசாவின் மூலம் குறிப்பிட்ட ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த விதி நீக்கப்பட்டு சந்தை மதிப்பிற்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்தில் ஒரு நிறுவனம் வேலை வாய்ப்பு அறிவிக்கும் போது 21 நாட்கள் கழித்துதான் வெளிநாட்டு ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டும் ஆனால் தற்போது அந்த விதியை நீக்கியுள்ளது. உடனடியாக இப்போது வெளிநாட்டினரை தேர்வு செய்யலாம்.