ஆஹா என்ன நடக்குது!! ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்தை தொடர்ந்து அவரின் கிட்டார்ஸ்டும் விவாகரத்து கோரியுள்ளார்!!

0
70
Wow what's going on!! Following AR Raghuman's divorce, his guitarist also filed for divorce!!

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ர பானுவிற்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட சுமார் 29 ஆண்டுகள் சிறப்பான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் பல மேடைகளில் தங்களின் காதலை பற்றி அழகாக கூறியிருந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன.

இதில் மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது என கூறப்படுகிறது. இளைய மகன் ஏ.ஆர்.அமீன் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கிறார். இந்த நிலையில் அவர்கள் விவாகரத்து செய்ய போவதாக வந்த செய்தி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது பற்றி அவரது மகனும் எங்களுக்கு இதில் இருந்து வெளிவர தனிப்பட்ட நேரம் வேண்டும் என தெரிவித்தார்.

இந்த விவாகரத்து செய்தி வந்த நிலையில் அடுத்ததாக ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவில் இணைந்து வேலைபார்க்கும் கிட்டார்ஸ்ட் மோகினி டே தனது கணவரை பிரிவதாக அவரின் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டார்ஸ்ட் மோகினி டே நானும் எனது கணவரும் ஒரு மனதாக பிரிவதாக முடிவு எடுத்தாலும் நாங்கள் இருவரும் இணைந்து ஒன்றாக இசை துறையில் பணியாற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் கிட்டார்ஸ்ட் மோகினி டே ஒரே துறையில் வேலை செய்து வருவதால் இந்த தகவல் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.