தவறு செய்த அண்ணன்! தங்கை கூறிய பொய் பழி! இரண்டு வருடங்கள் வீணானதே!
மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு போலீசில் ஒரு புகார் தெரிவித்தார். தாய் மற்றும் தந்தை வெளியே சென்றிருந்த நேரத்தில் தனது சொந்த அண்ணனே தன்னிடம் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறி ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் காரணமாக அந்த அண்ணனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
அப்போது அந்த பெண் மைனராக இருந்ததால் அவருக்கு எந்த பரிசோதனையும் செய்யவில்லை. அந்த அண்ணனுக்கு ஜாமீனே கிடைக்கவில்லை. இந்நிலையில், அந்த பெண் திடீரென தகவலை கூறியுள்ளார். அதில் தன் காதலனுடன் வெளியேற தன் அண்ணன் சம்மதிக்காததன் காரணமாகவும், மேலும் தன்னுடன் சண்டை போட்டு அடித்ததன் காரணமாகவும் நான் அவ்வாறு கூறினேன். என்னை அவன் எந்த வன்கொடுமையும் செய்யவில்லை.
அவனை பழி வாங்குவதற்காகவே அவ்வாறு கூறினேன். இந்த தகவலை கேட்ட நீதிமன்றம் மற்றும் போலீசார் அதிர்ச்சியாகியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணுக்கு எந்த பரிசோதனையும் செய்யாததன் காரணமாக அந்த குற்றம் நடந்ததா? இல்லையா? என்றே தெரியவில்லை என்று சொல்லி அந்த நிரபராதியையும் வெளியே விட்டு உள்ளது.
ஆனால் தவறு செய்யாமல் இரண்டு வருடங்கள் தண்டனை அனுபவிப்பது எவ்வளவு பெரிய தவறு. இதில் அந்தப் பெண் மீது சந்தேகம் உள்ளது. மேலும் அந்தப்பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற வழக்குகளை என்ன செய்வது. நிரபராதி தேவை இல்லாமல் தண்டனை அனுபவித்து விட்டாரே.