Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற யாக்கை திரி பாடல்! அரங்கமே திரும்பிப் பார்க்கும்படி திரிஷா மற்றும் சித்தார்த் செய்த லூட்டி !

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற யாக்கை திரி பாடல்! அரங்கமே திரும்பிப் பார்க்கும்படி திரிஷா மற்றும் சித்தார்த் செய்த லூட்டி !

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் தற்பொழுது இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி ,ஐஸ்வர்யா ராய் திரிஷா ,விக்ரம் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக தயாராக உள்ளது. இதனின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. இப்ப படத்தினை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த ஐந்தாம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த்தம் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அந்த அரங்கில் திரிஷா மற்றும் சித்தார்த் நடித்த ஆயுத எழுத்தில் இருந்து யாக்கை திரி பாடல் போடப்பட்டது. மூத்த நடிகர்கள் இருந்த போதிலும் யாரையும் கண்டு கொள்ளாமல் அப்பாட்டிற்கு திரிஷா மற்றும் சித்தார்த் நடனமாட தொடங்கிவிட்டனர்.

இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சித்தார்த் மற்றும் திரிஷா யாக்கை திரிபாடலுக்கு செய்த வைப் என்ற ஹேஷ் டாக்குடன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Exit mobile version