Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ்… மீண்டும் இணையும் KGF கூட்டணி? பின்னணி என்ன?

கேஜிஎஃப் இரண்டு பாகங்களின் வெற்றியின் மூலம் யாஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகிய இருவரும் உலகளவில் பிரபலமாகி உள்ளனர்.

கன்னட சினிமாவை உலகமெங்கும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் எது என்றால் KGF இரண்டு பாகங்களையும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.. நடிகர் யாஷ்  நடித்த இந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸான கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகள் மூலமாக மட்டும் சுமார் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டனர். படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் கேஜிஎஃப் போலவே ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கேஜிஎஃப் நாயகன் யாஷ் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி நடிக்கும் பட்சத்தில் படத்தின் மீது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகும்.

கேஜிஎஃப்  2 படத்துக்கு யாஷ் அடுத்து நடிக்கும் படம் பற்றிய அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த தகவலும் அந்த படம் பற்றி வெளியாகவில்லை.

Exit mobile version