கரையை கடந்தது யாஸ் புயல்! பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!

0
107

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்காசி, மதுரை, நீலகிரி, போன்ற மாவட்டங்களிலும் வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறது. திண்டுக்கல், தேனி, போன்ற மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தேனி திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, நீலகிரி, போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், போன்ற இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நாளை தினம் நீலகிரி, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், போன்ற இடங்களில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் எனவும், வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. வருகிற 28-ஆம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், வரும் 30-ஆம் தேதி தேனி, நீலகிரி, திண்டுக்கல், போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

வட தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று ஒருசில சமயங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரு அளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் இருக்குமெனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் மதியம் 12 20 மணிக்கு அதிதீவிர புயலாக யாஸ் புயல் ஒடிசா அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்ற காரணத்தால், தென்மேற்கு அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.