மனித உடலில் பல வகையான விஷயங்கள் நடக்கிறது.சில நிகழ்வுகள் எதனால் நடக்கிறது என்றே தெரியாது.அவற்றில் சிலவை தும்மல்,விக்கல்,கொட்டாவி போன்றவை.
இன்றைய காலகட்டத்தில் உடல் சோர்வு என்பது பொதுவான ஒன்றாக திகழ்கிறது.வேலைப்பளு காரணமாக உரிய நேரத்தில் தூங்க முடியாமல் போகிறது.இதனால் உடல் சோர்வு உண்டாகி அடிக்கடி கொட்டாவி வருகிறது.
இதனால் உடல் பலவீனமானது போன்ற உணர்வு ஏற்படுகிறது.தூக்கமின்மை,பிடிக்காத ஒரு செயலை சலிப்புடன் செய்தல் போன்ற காரணங்களால் அடிக்கடி கொட்டாவி வருகிறது.அதிலும் விருப்பம் இல்லாத பாடங்களை படிக்கும் நேரத்தில் அனைவரும் இந்த கொட்டாவியை பிரச்சனையை சந்திப்பீர்கள்.
மேலும் சில உடல் நலக் கோளாறுகளாலும் கொட்டாவி ஏற்படுகிறது.இந்த கொட்டாவியை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
உங்களுக்கு எப்பொழுது எல்லாம் அதிகமாக கொட்டாவி வருகிறதோ அப்பொழுது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.இவ்வாறு செய்தால் கொட்டாவி வருவது கட்டுப்படும்.
அடிக்கடி கொட்டாவி வந்தால் அதை கட்டுப்படுத்த சூடான பானங்களை அருந்தலாம்.நகைச்சுவை வீடியோக்கள்,படங்கள் போன்றவற்றை பார்ப்பதில் ஆர்வம் செலுத்தினால் கொட்டாவி வருவது கட்டுப்படும்.உடலில் ஏதேனும் பாதிப்புகள் இருந்து கொட்டாவி வருகிறது என்றால் உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.