உங்கள் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நிரந்தரமாக நீங்க இந்த எளிய குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள்.
பற்களில் மஞ்சள் கறை உருவாக காரணங்கள்:-
1.சரியாக பல் துலக்காமை
2.உணவுத் துகள்கள் தேங்குதல்
3.வாய் சுத்தமின்மை
பல் மஞ்சள் கறைகளை அகற்றும் அற்புத வீட்டு வைத்தியங்கள்:
தேவையான பொருட்கள்:-
**கால் தேக்கரண்டி சமையல் சோடா
**அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு
**சிறிதளவு டூத் பேஸ்ட்
செய்முறை விளக்கம்:-
1)முதலில் சமையல் சோடா,எலுமிச்சை சாறு மற்றும் டூத் பேஸ்டை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2)பிறகு மூன்றையும் ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து இதை டூத் பிரஸில் வைத்து பற்களை துலக்க வேண்டும்.அவ்வளவு தான் பற்களில் படிந்துள்ள காபி கறை,மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சிடும்.
தேவையான பொருட்கள்:-
**அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
**கால் தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்
**தேவையான அளவு டூத் பேஸ்ட்
செய்முறை விளக்கம்:-
1)முதலில் இரண்டு வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.
2)பிறகு இதை கிண்ணத்தில் போட்டு அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக் மிக்ஸ் செய்ய வேண்டும்.
3)அடுத்து தேவையான அளவு டூத் பேஸ்டை அதில் சேர்த்து ஸ்பூன் கொண்டு நன்றாக கலந்துவிட வேண்டும்.
4)இந்த கலவையை டூத் பிரஸில் வைத்து பல் துலக்கினால் பற்களில் படிந்த கறைகள் எளிதில் நீங்கிவிடும்.
தேவையான பொருட்க:-
**கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்
**கால் தேக்கரண்டி கரி தூள்
செய்முறை விளக்கம்:-
1)மஞ்சள் தூள் மற்றும் கரித்தூளை ஒரு கிண்ணத்தில் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
2)பிறகு அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.
3)பிறகு இந்த பேஸ்டை கொண்டு பல் துலக்கினால் பற்களில் உள்ள கறைகள் முழுமையாக நீங்கிவிடும்.