Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது போதும்! 3 நாட்களில் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறிவிடும்!

மூன்று நாட்கள் மட்டும் இதை நீங்கள் உபயோகித்து வந்தால் மஞ்சள் கறைகள் நீங்கி உங்கள் பற்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடும். இந்த முறையானது பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவதோடு வாய்களில் உள்ள துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் உள்ள வீக்கம் அனைத்தையும் சரி செய்யும். அதில் என்ன வென்று வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. சீரகம் 2 ஸ்பூன்

2. உப்பு

3. தேங்காய் எண்ணெய்

4. தக்காளி

செய்முறை:

1. முதலில் இரண்டு ஸ்பூன் சீரகத்தை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

2. இப்பொழுது ஒரே பவுலை எடுத்துக் கொள்ளவும்.

3. அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பொடித்து வைத்த சீரகப் பொடியை எடுத்துக் கொள்ளவும்.

4. சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

5. பின் தேங்காய் எண்ணெய்யை 4 சொட்டு விடவும்.

6. பின் ஒரு தக்காளி பழத்தை எடுத்து அதில் சிறிதளவு துளைபோட்டு சாற்றை மட்டும் 5 சொட்டு விட்டுக் கொள்ளவும்.

7. இதை பொழுது நன்றாக கலந்து கொள்ளவும்.

8. அவ்வளவுதான் தயார்.

இதை நீங்கள் காலையில் மற்றும் இரவு படுக்க செல்லும் முன் கை விரலளால் எடுத்து நன்றாக தேய்த்து 3 நாட்கள் தொடர்ந்து பல் தேய்த்து வர உங்களது பற்கள் வெண்மையாக மாறும்.

வெண்மையாக மாறுவதோடு மட்டுமில்லாமல் வாய் துர்நாற்றம் நீக்கிவிடும். பல் ஈறுகள் வீக்கமாக இருந்தால் அதனை சரிசெய்யும்.

இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வர உங்களுக்கு பற்களில் ஏற்படும் பிரச்சினைகள் எதுவும் அண்டாது.

Exit mobile version