Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இருக்கு ஆனால் இல்ல – சுகாதார அமைச்சகம்!!

இருக்கு ஆனால் இல்ல – சுகாதார அமைச்சகம்!!

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனையில் நெகடிவ் என வந்தாலும் சில நாட்கள் கழித்து பாசிடிவ் ரிசல்ட் வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது ஓமிக்ரான் தொற்று பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு ஒரு வாரம் தனிமைபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் பெரும்பாலோனோருக்கு பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்தாலும் சில நாட்கள் கழித்து அவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்படுவதாகவும் ஆகவே அவர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் மற்றவர்களுக்கும் தொற்றை பரப்புகின்றனர் என்றும் டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே தான் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர்கள் ஒரு வாரம் தனிமைபடுத்தப்படுவதாக  அவர் கூறினார்.

Exit mobile version