பொது மக்களிடையே வந்த நம்பிக்கை! துரிதப்படுத்தும் மாநில அரசு!

0
224

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவால்லை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால் பொதுமக்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே தினத்தில் 33 ஆயிரத்து 764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று இந்த நோய்க்கு 475 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 715 ஆக அதிகரித்திருக்கிறது. 29 ஆயிரத்து 617 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து நலம் பெற்று வீடு திரும்பியதை தொடர்ந்து மொத்த நலன் பெற்றோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 13 ஆயிரத்து 221 ஆக அதிகரித்திருக்கிறது.

இதன் காரணமாக, தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. தற்சமயம் எல்லா ஊர்களிலும் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் இரண்டாவது தினமாக நேற்று தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று இரண்டு லட்சத்து 59 ஆயிரம் பேர் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சென்ற வாரங்களில் தினசரி எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு கீழே இருந்த சூழலில் தற்சமயம் இந்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. ஆகவே எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகிறார்கள் குறிப்பாக இளைஞர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.