இன்றைய நவீன காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியது முக்கியமான ஒன்றாகும்.வேலை,குடும்பம்,தொழில் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படுகிறது.
நம் உடல் மற்றும் மன ஆரோக்கியமாக இருக்க உதவும் சிறந்த வழிகளில் ஒன்று யோகா.உடலை சுருக்கி செய்யும் பயிற்சி யோகா.தியானப் பயிற்சி மூலம் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.
தினமும் யோகா செய்வதால் உடல் புத்துணர்வுடன் இருக்கும்.உடலுக்கு,மனதிற்கு தனித்தனி யோகா இருக்கிறது.நம் மனதை ஆரோக்யமான வைத்துக் கொண்டால் மற்றவற்றை அனைத்தையும் சரி செய்து கொள்ள முடியும்.
யோகா செய்வதால் மன அமைதியை அனுபவிக்கலாம்.இதனால் சினம்,துன்பம் அனைத்தும் நீங்கும்.தினமும் யோகா செய்வதால் முதுமையை தள்ளி போட முடியும்.யோகா செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடல் மற்றும் மனதை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள யோகா உதவுகிறது.யோகா செய்வதால் உடல் அசைவுகள் நன்றாக இருக்கும்.எலும்புகளின் தண்டுவடம்,தசைகள் அனைத்தும் வலுப்பெறும்.உடலில் எவ்வித வலி வேதனையும் இல்லாமல் வாழ முடியும்.
யோகா செய்வதால் மன அழுத்தம் முழுமையாக நீங்கும்.உடலில் நோய் பாதிப்புகள் இன்றி ஆரோக்கியமாக இருக்க யோகா உதவுகிறது.வயதான பின்னரும் ஆரோக்கியமாக வாழ யோகா பெரிதும் உதவுகிறது.தினமும் யோகா செய்வதால் உடல் எடை குறையும்.இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் யோகா செய்யலாம்.