Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உத்தரப் பிரதேச முதலமைச்சராக 2வது முறையாக இன்று பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்!

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.ஏனென்றால் அந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினால் நிச்சயமாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. ஏனென்றால் இந்தியாவில் மிகப் பெரிய மக்கள் தொகை மற்றும் பரப்பளவை கொண்ட ஒரே மாநிலம் உத்தரப் பிரதேசம்தான்

அதன் காரணமாகத்தான் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வந்தனர்.ஆனால் இந்தத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த யோகி ஆதித்தியநாத் தலைமையிலான அரசு மீண்டும் அரியணையேறியது.

அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியை கூட்டணி 273 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக இன்று யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்கவிருக்கிறார் லக்னோவிலுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் மாலை 4 மணியளவில் இந்த விழா நடைபெறவிருக்கிறது.

இந்த விழாவில் யோகி ஆதித்யநாத்திற்கு அந்த மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இதைத் தவிர ஏராளமான தொழிலதிபர்களும் பங்கேற்பார்கள் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.ரிலையன்ஸ் நிறுவன அதிபர் உட்பட 60 தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அயோத்தி, மதுரா மற்றும் வாரணாசி சார்ந்த 50-க்கு மேற்பட்ட சாதுக்களுக்கு யோகி ஆதித்யநாத் தனிப்பட்டமுறையில் அழைப்பு விடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு மாநிலத்தில் பல்வேறு எதிர்க் கட்சித் தலைவர்களுக்கும் இந்த பதவியேற்பு விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று அகிலேஷ் யாதவ் அறிவித்திருக்கிறார்.

இதற்கு நடுவே யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழாவிற்காக வாஜ்பாய் கிரிக்கெட் மைதானம் 50 ,000 பேர் அமரும் விதத்தில் மிகவும் பிரமாண்டமாக தயார் படுத்தப்பட்டுள்ளது.

மைதானத்திற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மின்விளக்குகளால் ஒளிவிடபட்டிருக்கிறது. அதோடு பார்க்குமிடமெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் முழு உருவ கட்டவுட்டுக்ச்ளாக காட்சியளித்து வருகின்றன.

இந்த பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் வருவதால் லக்னோ முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ருக்கிறது.

Exit mobile version