Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதுவை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த யோகிபாபு!! என்ன பேசினார்கள் தெரியுமா?

புதுவை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த யோகிபாபு!! என்ன பேசினார்கள் தெரியுமா?

தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகிபாபு.இவர் அஜித்,விஜய்,ரஜினி,சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இவர் கடைசியாக நடித்த படங்கள் ஜெயிலர் மற்றும் லக்கிமேன் ஆகும்.இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருக்கின்றது.

இந்நிலையில் ஆன்மீகப் பயணம் அதிகம் மேற்கொண்டு வரும் யோகிபாபு புதுச்சேரி மாநிலத்தில் அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் இன்று கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து புதுவை முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்த யோகிபாபு முதல்வரிடம் ஆசி பெற்றார்.இதனை தொடர்ந்து யோகிபாபுவிடம் நலம் விசாரித்த முதல்வர் ரங்கசாமி அவர்கள் சொந்த ஊர் சென்னை தானா? என கேட்டார்.அதற்கு யோகிபாபு தன்னுடைய பூர்விகம் ஆற்காடு.பிறந்தது சென்னையில் தான் என்று தெரிவித்தார்.தற்பொழுது என்ன படம் நடித்திருக்கிறீர்கள்? என்று முதல்வர் கேட்டதற்கு நடிகர் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்தேன்.அடுத்து லக்கிமேன் என்ற படம் திரையில் வெளியாகியுள்ளது என யோகிபாபு தெரிவித்தார்.தொடர்ந்து யோகிபாபுவின் திரைப்பயணம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து சந்திப்பு முடிந்து யோகிபாபு கிளம்பும் பொழுது அவருக்கு நெற்றியில் திருநீர் இட்டு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்று ரங்கசாமி வாழ்த்தி அனுப்பினார்.

Exit mobile version