Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எச்சரிக்கை விடுத்த யோகிபாபு!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Yogibabu warns! Shocked fans!

Yogibabu warns! Shocked fans!

எச்சரிக்கை விடுத்த யோகிபாபு!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்கிறார் யோகிபாபு. தற்போதைய சூழலில் இவர் இல்லாமல் ஒரு படம் கூட ஓடுவதில்லை.அந்த அளவிற்கு பெயரும், புகழும்,மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.இவர் ஆரணியில் 22ம்தேதி ஜூலை 1985ம் ஆண்டு பிறந்தார்.2009 ம் ஆண்டு முதல் இவரின் திரையுலக பயணத்தை தொடர்ந்தார்.இவரை முதலில் அறிமுகம் செய்தது டைரக்டர் ஆன ராம்பாலா ஆகும்.நடிகர் யோகிபாபு நண்பருடன் லொள்ளு சபா பார்க்கவரும் போது டைரக்டர் ஆன ராம்பாலா அவரின் தோற்றதை பார்த்து நடிப்பில் ஆர்வம் உள்ளதா என கேட்டு சின்னத்திரையில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக எடுத்துக்கொண்டார்.முதல் இரண்டு வருடங்கள் சிறு சிறு திரைத்துறை சார்ந்த வேலைகளை பார்த்தார்.2009 ம் ஆண்டு வெளிவந்த அமீரின் இயக்கத்தில் யோகி திரைப்படம் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.

அதன் மூலம் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகராக களம் இறங்கினார்.இதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் மக்களுக்கு இவர் முகம் பெரிதும் அடையாளம் காட்டப்படவில்லை.2014 ம் ஆண்டு யாமிருக்க பயமே என்ற திரைப் படத்தில் பண்ணி மூஞ்சு வாயா என்ற டயலாக் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.அதைத் தொடர்ந்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் மக்கள் மனதில் மிக உயர்ந்த இடம் பிடித்ததை அடுத்து  அவர் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என டைரக்டர்கள் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்.கடந்த 2019 ம் ஆண்டு மட்டும் 30 திரைப்படங்களுக்கு மிகாமல் நடித்துள்ளார்.அதே ஆண்டில் மஞ்சு பார்கவி என்பவரை திருத்தணியில் திருமணம் செய்துள்ளார்.அவருக்கு ஒரு மகனும் பிறந்துள்ளான்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் நடிகர் யோகிபாபு பெயரில் போலி கணக்கு தொடங்கிஉள்ளதாக கூறியுள்ளார்.இந்த கணக்கை தொடங்கியுள்ள மர்ம ஆசாமிகள் அரசியல் தலைவர்கள் பற்றி அவதூறாக பேசுவதும், கேலி செய்வதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த யோகிபாபு அது தனது கணக்கு இல்லை என்றும் யாரும் அதை தொடர வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டார்.இதில் பல சர்ச்சை கருத்துகளும் பதியபடுவதாகவும்,அவரின் கணக்கு என்று ஆயிரக்கணக்கான மக்கள் அதை தொடர்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.தற்போது அந்த கணக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து இதுதான் அந்த போலி கணக்கு என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.மேலும் அந்த மர்ம நபர்களை எச்சரிக்கை செய்துள்ளார்.

Exit mobile version