உடல் சூட்டை அதிகரிக்கும் தயிர்!! யாரெல்லாம் சாப்பிடலாம்.. எப்படி சாப்பிட வேண்டும்??
கோடைக்காலத்தில் நமது உடலை குளுமையாக வைத்துக் கொள்ளும் உணவு பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்த வகையில் தினம் தோறும் மூன்று லிட்டருக்கு மேல் தண்ணீர்பழ சாறு போன்றவற்றை அருந்துவது நல்லது.எந்த அளவிற்கு நமது உடலானது நீரோற்றமாக உள்ளதோ அந்த அளவிற்கு கோடை காலத்தில் உள்ள வெப்பநிலையை நாம் சமாளிக்க முடியும்.
பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டாலே பெரும்பாலானோர் தயிர் சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதால் உடல் சூடு அதிகமாகும் என்பது பெரும்பான்மையாக யாருக்கும் தெரிவதில்லை.தயிரில் இயற்கையாகவே வெப்பநிலையை அதிகரிக்கும் கூற்றுகள் உள்ளது.இதனை கோடை காலத்தில் நாம் சாப்பிடும் பொழுது நமது உடலானது மேற்கொண்டு சூட்டை கிளப்பி விடும்.
மேற்கொன்று நிபுணர்களும் எந்த முறையில் தயிர் உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கூறியுள்ளார்கள்.அதில்,தயிர் சாப்பிட நினைப்பவர்கள் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மோராக உண்ணலாம்.மேற்கொண்டு அதில் மிளகு உப்பு சீரகம் என சேர்த்து மசாலா மோராகவும் அருந்தலாம்.ஆனால் இதனை தவிர்த்து நேரடியாக தயிரை சாப்பாட்டில் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடானது மேற்கொண்டு அதிகரிக்கக்கூடும்.எனவே தயிரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாப்பிடுங்கள்.
அதேபோல கடைகளில் விற்கும் குளிர்பானங்கள்,ஐஸ்கிரீம் போன்றவற்றை உண்பதாலும் உடலின் சூடானது அதிகரிக்க கூடும்.எனவே அதனையெல்லாம் சாப்பிடக்கூடாது.உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் இயற்கை முறை உணவு பொருட்களை தான் அதிகம் சாப்பிட வேண்டும்.மேற்கொண்டு சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.