புளி சாதம், புளிக் குழம்பு ஆகியவை அதிகமாக சாப்பிடுபவர்காள நீங்கள்!! அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!!
நம்மில் சிலருக்கு புளிசாதம், புளிக் குழம்பு, புளிசட்னி என்று புளியை வைத்து தயார் செய்யப்படும் உணவு பொருள்கள் மிகவும் பிடிக்கும். அவ்வாறு புளியை அதிகமாக உணவாக சேர்த்துக் கொள்ளும் பொழுது உடலில் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அறு சுவைகளான இனிப்பு, காரம், துவர்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவற்றில் மனிதர்களாகிய நம்மால் கசப்பு, இனிப்பு, புளிப்பு, காரம் ஆகிய நான்கு சுவைகள் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் புளிப்பு சுவை கொண்ட புளியை வைத்து நாம் பல வகையான உணவுகளை தயாரித்து உண்கிறோம்.
புளி சாதம், புளி சட்னி, புளிக் குழம்பு, புளி மிட்டாய் முதல் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இந்த புளிப்பு சுவை மிகுந்த புளியை வைத்து தயார் செய்யும் உணவை நாம் அதிகமாக சாப்பிட்டு வருகிறோம். இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. அந்த பாதிப்புகள் பற்றி இனி பார்க்கலாம்.
புளியை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் ஏற்படும் பாதிப்புகள்..
* புளியை பயன்படுத்தி சமைக்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றது.
* புளியை பயன்படுத்தி சமைக்கப்படும் உணவுகளை அதிகமாக உண்ணும் பொழுது உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து விடுகின்றது.
* புளி சாதம், புளிக் குழம்பு, புளி சட்னி முதலான புளியை பயன்படுத்தி சமைக்கப்படும் உணவுகளை சாப்பிடும் பொழுது அதில் உள்ள புளிப்பு சுவை நம் பல்லுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
* புளிப்பு சுவை உள்ள உணவுகளை தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் பொழுது நமது உடலில் பித்தப்பை கற்களை உருவாக்கி விடும்.
* புளிப்பு தன்மை உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது உடலில் அமிலத் தன்மையை தூண்டி விடுகின்றது.
* நாம் புளியை வைத்து தயார் செய்யப்படும் உணவுப் பொருளை தொடர்ந்து உண்டு வந்தால் அலர்ஜியை உண்டாக்கி விடும்.
* நாம் புளிப்புத் தன்மை நிறைந்த புளியை வைத்து தயார் செய்யப்படும் உணவுப் பொருள்களை தொடர்ந்து சாப்பிடும் பொழுது நம் உடலில் வாசோகன்ஸ்டிரிக்சன் உருவாகின்றது.