Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை! சி.வி.சண்முகத்திற்கு பதிலளித்த பா.ஜ.க!

You are the one who gave us this position! BJP responds to CV Shanmugam!

You are the one who gave us this position! BJP responds to CV Shanmugam!

உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை! சி.வி.சண்முகத்திற்கு பதிலளித்த பா.ஜ.க!

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், அ.தி.மு.க வெற்றி பெரும் என எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத விதமாக தி.மு.க வெற்றி பெற்றது. தற்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது.

அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட கடந்த  20 ஆண்டுகளுக்குப் பின் சட்ட சபைக்குள் நுழைந்து உள்ளது பா.ஜ.க. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூரில்,  ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள் நடந்து முடிந்த சட்டமன்ற, பொதுத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு பாஜக உடனான கூட்டணியே காரணம் என தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து மிகவும் சர்ச்சையான நிலையில் இதற்கு பா.ஜ வின் மாநிலச் செயலாளர் கே. டி.ராகவன் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். சி.வி. சண்முகம் அவர்களின் டிவிட்டர் கணக்கை டேக் செய்து அதில் பதிவிட்டுள்ள கே.டி.ராகவன் அதிமுகவால் தான் பாஜக தோற்றது என்ற எண்ணம் எங்களுக்கும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version