Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்!

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்!

பெரும்பாலானோர் வாரம் தோறும் செவ்வாய் வெள்ளி சனி போன்ற தினங்களில் விரதம் இருந்து வழிபடுவார்கள். ஒரு சிலர் செவ்வாய்க்கிழமைகளில் கார்த்திகை நட்சத்திரத்திலும் திதி விரதம் என்பது சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள்.

செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானே வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் பூமியினால் தீராத பிரச்சனை உள்ளவர்களும் இந்த விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக குறையும் என்பது ஐதீகம்.

வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமை என்று காலையில் எழுந்தவுடன் நீராடி முடித்த பிறகு அருகில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் அதன் பிறகு வீட்டிற்கு வந்தவுடன் பால் பழச்சாறு மற்றும் அருந்தி முருகனின் திருநாமங்களை கூறி விரதம் இருக்கலாம். அதனை எடுத்து மாலையில் மீண்டும் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம் இவ்வாறு ஒன்பது செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும்.

Exit mobile version