Google pay மூலமும் கடன் பெறலாம்!! லோன் அப்ளை பண்ணும் வழிமுறைகள்!!

0
72
You can also get a loan through Google Pay!! How to apply for a loan!!

தற்பொழுது பணப் பரிவர்த்தனை என்பது அதிக அளவில் ஆன்லைன் மூலமே செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு முக்கிய செயலியாக இந்த google pay அமைந்திருப்பது அனைவரும் அறிந்ததே.

பணப்பரிவதனை செயலி மட்டும் இன்றி தற்பொழுது google pay கடன் வழங்கக்கூடிய நிறுவனங்களுக்கும் கடன் பெறுபவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

Google pay கடன் பெறுபவர்களுக்கும் கடன் வழங்குபவர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுவதுடன் நேரடியாக யாருக்கும் எந்தவித கடனையும் வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக google pay அப்ளிகேஷனில் பல லோன் ஆஃபர்கள் அதாவது “லோன்” என்ற பிரிவு தோன்றும். இது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்காது. ஏனெனில் கடன்களைப் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே இந்த அப்ளிகேஷன் ஆனது தெரியும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Google pay-யில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் :-

✓ முதலில் google pay ஆப் இருக்குள் செல்ல வேண்டும்.

✓ அதில் இருக்கக்கூடிய கெட் லோன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

✓ அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதில் தங்களுடைய விவரங்களை பார்க்கலாம்.

✓ அதில் அவரவருடைய சிபில் ஸ்கோர்களை வைத்து 9 லட்சம் வரை கடன் பெற இயலும்.

✓ மாதாந்திர EMI ஆனது 1000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. நாம் எவ்வளவு கடன் தொகை பெறுகிறோம் என்பதில் தான் மாதாந்திர இஎம்ஐ ஆனது மாறுபடும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

✓ கடனை திரும்ப செலுத்தக்கூடிய காலமானது ஆறு மாதங்கள் முதல் நான்கு ஆண்டுகள் வரை இருக்கலாம்.

✓ google pay மூலம் வாங்கப்படும் கடன்களுக்கு 13.99 % வட்டி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு :-

தவிர்க்க முடியாத அல்லது அத்யாவசியமான தேவைகளுக்கு மட்டுமே இது போன்ற மொபைல் ஆப்களின் மூலம் கடன் பெறலாம். இல்லையென்றால் பெரும்பாலும் இதன் மூலம் கடன்கள் பெறுவதை தவிர்ப்பது நல்லது.