Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பழைய ஓய்வூதிய திட்டத்தில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

You can also join the old pension scheme! Important information released by the government!

You can also join the old pension scheme! Important information released by the government!

பழைய ஓய்வூதிய திட்டத்தில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென பல்வேறு முறையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி சென்னையில் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள நிதித்துறை ஆணையர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் மற்றும் ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும் தமிழக முழுவதும் ஜக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வரும் மார்ச் 4ஆம்  தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களும் பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.அதனைத் தொடர்ந்து 2003 இல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பது குறித்து அனைத்து துறை செயலாளர்களும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில் தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு பணியில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஆணை பெற்று 2004 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படாத ஊழியர்களின் விவரங்களை பெற அனைத்து துறை செயலாளர்களுக்கும் நிதித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை எனவும் நிதித்துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version