நடப்பாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

0
111
#image_title

நடப்பு கல்வியாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஹோமியோபதி துறை துணை ஆணையரகம் அறிவித்துள்ளது.2023-2024 கல்வியாண்டிற்கான எம்.டி சித்தா மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு 2023ம் ஆண்டு நுழைவுத் தேர்வெழுதி தேர்ச்சி விழுகாட்டினை வைத்துள்ள மாணவர்கள்  இம்மருத்துவ மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த தகவல்களை www.tnhealth.tn.gov.in  சுகாதார துறையின் வலைதள  முகவரியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இம்மருத்துவ  படிப்பிற்கான அப்ளிகேஷன் இவ்வாணையரங்கத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும் இதற்கான தகுதி தரவரிசைப்படி கவுன்சிலிங் அட்டவணை மற்றும் பிற தகவல்களை www.tnhealth.tn.gov.in என்ற  வலைதள முகவரியில் அறிந்துகொள்ளலாம்.

இதற்கான விண்ணப்படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை இன்று முதல் 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அஞ்சல் அல்லது கொரியர் சேவையின் வாயிலாக அல்லது நேரில் விண்ணப்பிக்கவும் இறுதி நாள் வரும் 20ம் தேதி மாலை 5 வரையாகும்.இவ்வாறு சித்த மருத்துவ துணை ஆணையரகம் கூறியுள்ளது.