Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனியார் பள்ளிகளில் நாளை முதல் இலவசமாக கல்விக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு கீழ், மாணவர்கள் இலவச சேர்க்கை நடைபெற நாளை முதல் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கும் கீழ் இருக்கும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இலவசமாக ஏழை குழந்தைகளுக்கு சேர்க்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டது. இந்த திட்டத்தில் எஸ் கேஜிஅல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை என கல்வித்துறை கூறியுள்ளது.தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனை பெற்றோர்கள் இணையதளம் வழியாக வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். மேலும் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை கூறியுள்ளது. விண்ணப்பிக்கும் போது புகைப்படம், பிறப்புச் சான்று அல்லது பிறப்புச் சான்று ஆவணம், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று (இரண்டு லட்சத்திற்கும் குறைவான வருமான சான்றிதழ்) வாய்ப்பு மறுக்கப்பட்ட விரிவாகவே முன்னுரிமை கோரும் நபர் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்கள் நகல், சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் .இந்த திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அனைவரும் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ ,ஐசிஎஸ்இ ஆகிய பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறலாம்.

பெற்றோர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் வாய்ப்பு மறுக்கப் பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.பள்ளிகளில் அதிகமாக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்களை தோவு செய்யப்படுவர் .வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரிடம் இருந்து வரும் விண்ணப்பங்கள் குழுக்கள் நடக்காமல் முன்னுரிமை அளிக்க சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. தனியார் பள்ளிகளில் பட்டியல் மற்றும் அதில் உள்ள இடங்களில் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.

Exit mobile version