தமிழகத்தில் காலியாக உள்ள 10ஆயிரத்து 906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை இணைய தளம் வாயிலாக காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.10 ஆயிரத்து 906 பணியிடங்களுக்கு டிசம்பர் 13-ஆம் தேதி எழுத்துப்பூர்வ தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
www.tnusrbonline.org என்ற இணையதளம் மூலமாக வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வானது 37 மாவட்டங்களில் உள்ள மையங்களில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 3,099 பெண்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 3,784 பேரை தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளது.தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு 6,545 பேர் தேர்வு எழுதப்பட இருக்கின்றனர்.
மேலும் ,சிறைத் துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பணிக்கு 119 பேர் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர் .தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு 458 தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.