Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் உங்கள் ஆதாரில் உள்ள முகவரி முதல் செல்போன் எண் வரை மாற்றிக் கொள்ளலாம்!! முழு விவரம் இதோ

#image_title

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் உங்கள் ஆதாரில் உள்ள முகவரி முதல் செல்போன் எண் வரை மாற்றிக் கொள்ளலாம்!! முழு விவரம் இதோ!!

ஆதார் கார்டில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் புகைப்படம், கை விரல் ரேகை போன்றவற்றை அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த சேவை அனைத்து முற்றிலும் கட்டணமில்லா சேவை.

ஆதார் ஆதார் ஆதார் எங்கும் இதில் இதிலும் ஆதாரம் தேசிய மற்றும் மாநில அளவில் எந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தாலும் ஆதார் தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் சேர்ப்பது ஆனாலும் ஆதார் எண் கட்டாயம் கேட்கப்படுகிறது எனவே எங்கும் எதிலும் ஆதார் என்று ஆகிவிட்டது ஆனால் ஆதார் கார்டில் புகைப்படம் என சில பிரச்சனைகளும் குளறுபடிகள் உள்ளன.

இதனை சரி செய்யும் பொருட்டு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை அப்டேட் செய்யுங்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவை மாற கூடியது. ஆகையால் அதனை அப்டேட் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் ஆதார் மையத்திற்கு சென்று மாற்றிக்கொள்ள முடியும்.

 

இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை இலவசமாக செய்து கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், மை ஆதார் போர்டலில் மட்டுமே இதை இலவசமாக செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் நேரடி மையங்களில் ஆவண திருத்தங்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்..

இந்த வசதியை பெற வேண்டும் என்றால் https://myaadhaar.uidai.gov.in/ பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்ஷன்களை கிளிக் செய்து முகவரி ஆவணங்கள் மற்றும் பிறந்த தேதி, வயது போன்றவற்றை அப்டேட் செய்து கொள்ள முடியும்.

ஜூன் 14 ஆம் தேதி வரை மட்டுமே இதை இலவசமாக செய்ய முடியும். அதற்கு பிறகு ஆன்லைன் மூலம் செய்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும்.

தற்போது ஆதார் அட்டை பெறப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் அடையாளம் மற்றும் முகவரியை மீண்டும் சரிபார்க்க ஆவணங்களை ஒருமுறை அப்லோடு செய்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தியிருப்பதால் இந்த வசதியை கொடுத்துள்ளது.

Exit mobile version