இவர்களுடைய ஒப்புதல் இருந்தால் போதும் ஆதாரில் முகவரி மாற்றலாம்! யுஐடிஏஐ வெளியிட்ட புதிய வசதி!
மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழகும் ஆணையமானது அதாவது யு.ஐ.டி.ஏ.ஐ எனப்படும்.இவை பொதுமக்களுக்கு ஆதார் விவரங்களை வழங்கி வருகின்றது.ஆதாரில் முன்னதாகவே இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது குடும்பத் தலைவர் முறை கூடுதலாக தேர்க்கபட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் குடும்பத் தலைவராக பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் பொதுமக்கள் தங்களுடைய குடும்பத்தினரின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை தாங்களாகவே அதில் திருத்தம் செய்வதற்கும், மாற்றி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் இதற்கு குடும்பத்தலைவர் கண்டிப்பாக ஒப்புதல் வழங்கவேண்டும்.
அதன் பிறகு https://myaadhaar.uidai.gov.in//என்ற இணையதளத்தில் சென்று இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம்.அப்போது குடும்ப தலைவரின் செல்போன் எண்ணிற்கு ஒடிபி அனுப்பபடும் அதனை பதிவு செய்து இந்த நடவடிக்கையை தொடங்கலாம்.மேலும் குடும்ப தலைவருக்கும்,முகவரில் மாற்றம் அல்லது திருத்தம் மேற்கொள்ள விரும்பும் குடும்ப உறவினர்களுக்கும் என்ன உறவு முறை உள்ளது என்பதையும் அதற்கான சரியான சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டும்.
மேலும் ரேஷன் கார்டு, திருமண பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவாறான சான்றிதழ்கள் இல்லாத பட்சத்தில் குடும்ப தலைவரின் சுய ஒப்புதல் பத்திரிகை பூர்த்தி செய்து முகவரியில் திருத்தம் செய்யலாம்.இந்த சேவையை பெற ரூ 50 கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த கட்டணம் செலுத்திய பிறகே குடும்ப தலைவருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட முப்பது நாட்களுக்குள் இணையதளத்தில் குடும்ப தலைவர் தமது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு குடும்பத் தலைவரின் சம்மதத்தோடு மற்ற உறுப்பினர்கள் ஆன்லைனில் ஆதாரில் முகவரி மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.