Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

#image_title

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் தான்.பணக் கஷ்டம்,கடன் பிரச்சனை நீங்கி அவை பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிப்பது நல்லது.

*வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர்,முருகர் படங்களை மாட்டவும்.இவ்வாறு செய்தால் தான் வீட்டில் தெய்வாம்சம் காணப்படும்.அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்ட கூடாது.

*வீட்டில் செல்வம் பெருக எளிய வழிகள்!! கடைபிடித்தால் நீங்கள் கோடீஸ்வர யோகம் பெறலாம்!!

*வீட்டு வாசலை பார்த்தவாறு எழுமையான் படங்களை வைக்க வேண்டும்.

*தினமும் காலையில் எழுந்ததும் உங்கள் முகத்தை தான் நீங்கள் பார்க்க வேண்டும்.

*கல்லாப்பெட்டி அல்லது பீரோவில் மல்லிகை பூ கட்டாயம் வைக்க வேண்டும்.காரணம் லட்சுமி தாயாருக்கு விருப்பமான பூ மல்லிகை.இந்த மல்லிகை பூவை தினந்தோறும் வைப்பதினால் லட்சுமி தாயார் நம் பணம் வைக்கும் இடங்களில் நிரந்தரமாக குடி வந்து விடுவார்.இதனால் வீட்டில் பணம் மற்றும் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்.

*அதேபோல் பணப்பெட்டி மற்றும் பணம் வைக்கும் பர்ஸ்களில் லட்சுமி தாயாருக்கு உகந்த வாசனை நிறைந்த பொருட்களான சோம்பு,பச்சை கற்பூரம்,துளசி,பிரியாணி இலை,வெற்றிலை உள்ளிட்டவைகளை வைப்பதன் மூலம் பணக் கஷ்டம் நீங்கி அவை பெருகத் தொடங்கும்.

*வீட்டு பூஜை அறையை தூசு படியாமல் பார்த்துக் கொள்ளவும்.கடவுள் படங்களுக்கு சாற்றப்பட்ட மாலைகள்,பூக்கள்,எலுமிச்சம் பழங்கள் வாடி இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி விடவும்.

*வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டை துடைக்க வேண்டும்.
தலைக்கு குளித்து விட்டு தான் வீட்டு பூஜை அறைக்குள் நுழைய வேண்டும்.

*தினமும் காலை மாலை நேரங்களில் கடவுள் படங்கள் முன் தீபம் ஏற்றி வைப்பதை வழக்கமாக்கி கொண்டோம் என்றால் வீட்டில் பணக் கஷ்டம் என்பது எப்பொழுதும் வராமல் இருக்கும்.

*வீட்டில் நாம் உணவுக்கு பயன்படுத்தக் கூடிய அரிசி,பருப்பு,உப்பு உள்ளிட்டவைகளை தீராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*சமையல் அறையில் உள்ள உப்பு ஜாடியில் 1 ரூபாய் நாணயத்தை போட்டு வைத்தால் பணக் கஷ்டம் நீங்கி செல்வம் பெருகத் தொடங்கும்.

Exit mobile version