Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முக அடையாளத்தை வைத்து சுலபமாக இதை செய்யலாம்! வங்கிகளில் புதிய அறிமுகம்!

You can do this easily with facial recognition! New introduction in banks!

You can do this easily with facial recognition! New introduction in banks!

முக அடையாளத்தை வைத்து சுலபமாக இதை செய்யலாம்! வங்கிகளில் புதிய அறிமுகம்!

வங்கிகளில் முதலில் இருந்த நிலைக்கும், தற்போது உள்ள நிலைக்கும், நிறைய மாறுபாடுகளை நாம் காணலாம். ஒவ்வொரு விதங்களில் அது தொழில்நுட்பம் பரிமாண வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஒரு தொழில்நுட்ப கோளாறுகள், அல்லது இன்ன பிற தடைகள் ஏற்பட்டாலும், அதன் மூலம் திருடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

அது போல தற்போது அமீரக உள்துறை அமைச்சகத்தின் முக அடையாளத்தை சரி பார்க்கும் வசதியை, டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி பொது மக்கள் தங்களின் வங்கி கணக்கை தொடங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது அபுதாபியில் ஒரு வங்கி. மேலும் அபுதாபியில்  தான் இந்த சேவையை முதன் முதலாக செய்யவும் ஆரம்பித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம் என்றும்,  வங்கிக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் இதன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வீட்டில் இருந்தபடியோ அல்லது அலுவலகத்தில் இருந்தபடியோ கூட ஒவ்வொருவரும் தன் புது வங்கிக் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இத்தகைய வசதியை செய்யும் முதல் வங்கி என்ற பெருமையை அபுதாபி இஸ்லாமிய வங்கி பெற்றுள்ளது. மேலும் இந்த வசதிகளின் மூலம் புதிதாக வங்கி கணக்கை தொடங்கும் நபர்களின் பாஸ்போர்ட், அமீரக அடையாள அட்டை உள்ளிட்டவற்றைச் சரிபார்க்கப் படுவதுடன் அவரது முக அடையாளமும் உறுதி செய்து கொள்ளப்படுகிறது. இந்த நடைமுறையின் மூலம் 5 நிமிடத்திற்கு உள்ளாகவே புது வங்கிக் கணக்கை ஒருவர் தொடங்க முடியும் என்றும் கூறுகிறது.

இந்த வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கு பொதுமக்கள் தங்களது இந்த வங்கியின் செயலியை தங்களது செல்போன் அல்லது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டாலே போதும் என்றும் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாவது திருடும் கும்பல்கள் மற்றும் போர்ஜரி நபர்களிடமிருந்து வங்கி கணக்குகள் பாதுகாக்கப்படும் என்று நம்பலாம்.

Exit mobile version