அமர்ந்த இடத்தில் இருந்படி ஈசியாக ஆன்லைனில் PASSPORT அப்ளை செய்வதுவிடலாம்!!

0
215
You can easily apply PASSPORT online from your seat!!

அமர்ந்த இடத்தில் இருந்படி ஈசியாக ஆன்லைனில் PASSPORT அப்ளை செய்வதுவிடலாம்!!

இந்தியாவில் இருந்து இதர நாடுகளுக்கு வான்வழி பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் கட்டாயமான ஒன்றாகும்.இந்த பாஸ்போர்ட்டை பெறுவதற்கு இடை தரகர்களை நாட வேண்டிய நிலை மாறி தற்பொழுது வீட்டில் இருந்தபடிஎளிதில் அப்ளை செய்து பெற்றுக் கொள்ளும் வசதி வந்துவிட்டது.

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:

*ரேசன் கார்டு
*பான் கார்டு
*ஓட்டர் ஐடி
*பேங்க் பாஸ் புக்
*GAS இணைப்பு ரெசிப்ட்
*பிறப்பு சான்றிதழ்

படி 01:

முதலில் பாஸ்ப்ரோட் சேவை இணையதள பக்கத்தில் உள்ள “New User Register Now” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

படி 02:

பின்னர் “Passport Office” என்பதைத் கிளிக் செய்தால் ஒரு மெனு தோன்றும்.அந்த மெனுவில் உங்கள் லொகேஷன் அதாவது உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் ஷோ ஆகும்.அதை கிளிக் சரி பார்த்து கிளிக் செய்யவும்.

படி 03:

பின்னர் தங்களுக்கான ஆன்லைன் படிவம் நிரப்ப வேண்டும்.பின்னர் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து உள்நுழையவும்.

படி 04:

பின்னர் தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் லிங்க்கை கிளிக் செய்து உள் நுழையவும்.

படி 05:

பின்னர் “Apply for Fresh Passport/Re-issue of Passport” என்பதைக் கிளிக் செய்து படிவத்தை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

படி 06:

பின்னர் படிவத்திற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி அப்பொய்ன்மெண்ட் ஸ்லாட்டை செலக்ட் செய்யவும்.பின்னர் கேப்ட்சா குறியீட்டை சமர்ப்பித்து பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்யவும்.

படி 07:

பிறகு ஆர்டர் எண் மொபைல் அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.பின்னர் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.இவ்வாறு செய்த 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் தபால் வழியாக உரிய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.