வீட்டிலிருந்தே சுலபமாக பான் கார்டில் போட்டோ மாற்றலாம்!! வழிமுறைகள் இதோ!!

0
83
You can easily change photo in PAN card from home!! Here are the instructions!!

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் பான் கார்டு என்பது முக்கிய ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக வங்கிக் கணக்கு தொடங்குவது, வீடு வாங்குவது, ஆதார் கார்டுடன் இணைப்பது போன்ற பல செயல்களுக்கும் பான் கார்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நிதிச் சேவைகளில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்குப் பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் சிக்னேச்சரை புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியமாகும்.

பான் கார்டில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் :-

✓ தற்போதய புரோட்டியான் என்ற இணையதளத்தில் பான் விண்ணப்பப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

✓ “Changes or Correction in existing PAN data” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு “Category” என்ற மெனுவின் கீழ் உள்ள “Individual” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

✓ தேவையான விவரங்களை நிரப்பி “Submit” என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு ஒரு டோக்கன் நம்பர் உருவாக்கப்படும்.

✓ பின்னர் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும். இதற்கு ஆதார் அல்லது இஐடி போன்ற விவரங்கள் தேவைப்படும்.

✓ பிறகு “Photo Mismatch” அல்லது “Signature Mismatch” என்ற பெட்டியைத் தேர்ந்தெடுத்து உங்களின் பெற்றோர் விவரங்களை நிரப்ப வேண்டும்.

✓ உங்களுடைய முகவரி விவரங்கள், மொபைல் நம்பர், அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதி விவரங்கள் ஆகியவற்றை வழங்கவும்.

✓ ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.

✓ படிவத்தை ஒரு முறை சரி பார்த்துக்கொண்டு, திருத்தங்கள் இருந்தால் அதைச் சரி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

✓ விண்ணப்பிக்கும் நபர் இந்தியாவிற்கு உள்ளே இருக்கும் நபராக இருந்தால் ரூ. 110 பணம் செலுத்த வேண்டும்.இந்தியாவிற்கு வெளியே இருக்கும் நபராக இருந்தால் ரூ. 1,020 பணம் செலுத்த வேண்டும்.

✓ விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து தேவைப்படும் ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

✓ விண்ணப்பத்தை ட்ராக் செய்வதற்கு 15 இலக்க அக்னாலேஜ்மென்ட் நம்பரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.