கடைகளில் விற்க கூடிய ப்ரோடீன் பவுடரை இனி வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம்!

0
122
You can easily prepare store-bought protein powder at home!

கடைகளில் விற்க கூடிய ப்ரோடீன் பவுடரை இனி வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம்!

புரத மாவு என்று அழைக்கப்படும் ப்ரோடீன் பவுடர் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.உடல் தசைகளை வலிமையாக்குவதோடு உடலை சோர்வின்றி வைத்துக் கொள்ள உதவுகிறது.

கடைகளில் விற்க கூடிய ப்ரோடீன் பவுடர்களில் செயற்கை ஊட்டச்சத்து பொருட்கள் கலக்கப்படுகிறது.இவை உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.எனவே வீட்டு முறையில் ப்ரோடீன் பவுடர் தயாரித்து எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு – 100 கிராம்
2)வால்நட் – 100 கிராம்
3)வேர்க்கடலை – 100 கிராம்
4)முந்திரி -100 கிராம்
5)பால் பவுடர் – 250 கிராம்
6)பூசணி விதை – 50 கிராம்
7)சியா விதை – 25 கிராம்
8)ஓட்ஸ் – 100 கிராம்
9)பிஸ்தா – 100 கிராம்
10)வெள்ளரி விதை – 100 கிராம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 100 கிராம் பாதாம் பருப்பு போட்டு மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்.இதை ஒரு தட்டில் கொட்டி விடவும்.பால் பவுடரை தவிர்த்து இதர பொருட்களை பாதாம் பருப்பு போல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த பொருட்களை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் பால் பவுடர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.

இந்த பவுடரை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும்.பின்னர் ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ப்ரோடீன் பவுடர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்து வந்தால் உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.ப்ரோடீன் பவுடர் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுப்பவை.எனவே கடைகளில் விற்க கூடிய செயற்கை ப்ரோடீன் பவுடர்களை உட்கொள்வதை விட வீட்டுமுறையில் ப்ரோடீன் பவுடர் தயாரித்து பயன்படுத்துவது நல்லது.