பெண்களுக்கு முகம்,கை,கால் போன்ற பகுதிகளில் முடி இருப்பது அழகை கெடுக்கும் வகையில் இருக்கிறது.இதனால் பல பெண்கள் ஷேவிங்,வேக்ஸிங்,லேசர் சிகிச்சை செய்து உடலில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றிவிடுகின்றனர்.ஆனால் இதுபோன்று செய்வதால் சருமத்தில் இருக்கின்ற முடி இன்னும் அதிகமாக வளரத் தொடங்கிவிடும்.இது சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கலாம்.
சருமத்தில் முளைத்திருக்கும் தேவையற்ற முடிகளை அகற்ற செலவின்றி வீட்டில் இருக்கின்ற பொருட்களை மட்டும் பயன்படுத்தி பலன் காணலாம்.முகம்,கை,கால்களில் இருக்கின்ற முடிகளை இயற்கை முறையில் அகற்ற பயன்படுத்த வேண்டிய பொருட்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
1)தேன்
2)சர்க்கரை
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.பிறகு இதை முகத்தில் அப்ளை செய்து இருபது நிமிடங்கள் கழித்து ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து முகத்தை அழுத்தி துடைத்தால் தேவையற்ற முடிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
1)பால்
2)எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி பால் மற்றும் 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.பிறகு இதை முகம் முழுவதும் அப்ளை செய்து சிறிது நேரம் உலர்த்தவும்.அதன் பின்னர் குளிர்ந்த நீர் பயன்படுத்தி முகத்தை கழுவினால் தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.
1)மஞ்சள்
2)கடலை மாவு
20 கிராம் கடலை மாவில் 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.பிறகு இரண்டு தேக்கரண்டி பன்னீர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் பயன்படுத்தி முகத்தை கழுவினால் தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.