உங்கள் அழகை கெடுக்கும் எத்துப்பல்லை எளிமையான முறையில் சரி செய்யலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

0
124
Tips to cure any dental problem

அழகான புன்னகையை வெளிப்படுத்த வெள்ளையான பற்கள் இருக்க வேண்டியது அவசியம்.சிலருக்கு பல் அமைப்பு சரியாக இல்லை என்றால் அழகான புன்னகை பெற முடியாது.அது மட்டுமின்றி முக அழகு முழுமையாக குறைந்துவிடும்.

பல் அமைப்பு முறையற்று இருந்தாலோ,எத்து பல்,பற்களில் காணப்படும் குறைபாடுகளை சரி செய்ய இன்று பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டது.அழகான பல் வரிசை இருந்தால் வசீகர முக அமைப்பு ஏற்படும்.பற்களின் தாடை,பல் சீரமைப்பு,பல் அறுவை சிகிச்சை என்று மருத்துவத்தில் இதற்கென்று பல வசதிகள் இருக்கின்றன.

சிறு வயதில் விரல் சூப்பும் பழக்கம்,நகம் கடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு மேல் தாடை பற்கள் முன்னோக்கி நீண்டு விடும்.சிலருக்கு இயற்கையாவே தாடை பற்கள் முன்னும் பின்னுமாக காணப்படும்.சிலருக்கு கீழ் தாடை பற்கள் மட்டும் முன்னோக்கி இருக்கும்.சிலருக்கு பற்களுக்கு இடையே அதிக இடைவெளி இருக்கும்.வேறு சிலருக்கோ பற்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு அமைந்திருக்கும்.இவை அனைத்தும் பல் குறைபாடு பிரச்சனை என்று சொல்லப்படுகிறது.

இந்த பல் குறைபாட்டை கிளிப் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்திட முடியும்.பல் அமைப்பை சீர்படுத்த கிளப் பயன்படுத்தப்படுகிறது.நிரந்தர கிளிப் அல்லது கழட்டி மாட்டும் வகையிலான கிளப்கள் என்று பல் அமைப்பிற்கு ஏற்றவாறு கிளிப்கள் இருக்கிறது.

உங்கள் பல் அமைப்பில் சிறிய குறைபாடு இருந்தால் கழட்டி மாட்டும் கிளிப்கள் பரிந்துரைக்கப்படுகிறது.அதுவே பல் அமைப்பில் பெரிய குறைபாடு இருந்தால் நிரந்தர கிளிப் வகைகள் பரிந்துரைக்கப்படுகிறது.பல் தாடை மற்றும் பற்களின் அமைப்பை சரி செய்ய அறுவை சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்கள் கழட்டி மாட்டும் கிளப்பை பற்களுக்கு பயன்படுத்தி வந்தால் அதற்கான சிகிச்சை கால அளவு ஒரு வருடம் ஆகலாம்.அதேபோல் நிரந்தர கிளிப்பை பயன்படுத்தினால் அதற்கான சிகிச்சை காலம் ஒன்றரை வருடம் ஆகலாம்.

கழட்டி மாட்டும் கிளிப் பயன்படுத்துபவர்கள் வாய் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.நிரந்தர பல் கிளிப் சிகிச்சை செய்தவர்கள் கடினமான உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.