ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்!
திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வார விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்,திமுக ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது.மேலும் 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டது.
மேலும் இந்தியாவிலேயே இரண்டாவதாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும்.அதுமட்டுமின்றி புதிய ரேஷன் கார்டு வாங்க விரும்பினால் விண்ணப்பித்த 15 நாட்களிலேயே ரேஷன் கார்டு வழங்கப்படும்.
தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. முதன் முறையாக கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வாங்கும் திட்டம் முதன் முதலில் சென்னையில் உதயநிதி தொடங்கி வைத்தார்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் ,உடுமலை அருகே குருவப்பநாயக்கனூர் ரேஷன் கடையில் உள்ள விற்பனையாளர் அனைத்து ரேஷன் கார்டுதார்களையும் ஒருங்கிணைந்த வாட்ஸ அப் குரூப் உருவாக்கியுள்ளார்.
அந்த குரூப்பில் ஒவ்வொருவருக்கும் ரேஷன் கடையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரம் குறித்து தகவல் தெரிவிக்கின்றார்,அதன் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் தேவையான பொருட்கள் உள்ள நாட்களில் சென்று பொருளை பெற்று கொள்கின்றனர்.மேலும் அவர் கடை வேலை நாள் ,வேலை நேரம் ,அரசு விடுமுறை ,தற்காலிக விடுமுறை குறித்து அந்த குரூப்பில் தெரிவிக்கின்றார்.இவை அந்த பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.