“ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிக்க பாத்த நயன்தாரா!!” ஆர்.ஜே. சுசித்ராவின் ஆக்ரோஷம்..

0
90
"You can hit two punches with one stone, Nayantara!!" RJ Suchitra's aggression..

” நடிகை நயன்தாரா, தனுஷ் இடையேயான ஆவணப்பட சர்ச்சை சில நாட்களாகவே பெரிதும் பேசப்பட்டது. நடிகை நயன்தாராவின் டாக்குமென்ட்ரியில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் விக்னேஷ் சிவனின் மேல் ஏற்பட்ட காதலையும், அவர்கள் இருவரின் கல்யாணத்தையும் காட்டியுள்ளார்”. அதைத் தொடர்ந்து “நானும் ரவுடிதான் பட தயாரிப்பாளர் தனுஷ் அந்த டாக்குமெண்டரியில் என் படத்தில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பும் இடம்பெற்றுள்ளன எனக்கூறி நயன்தாராவிடம் 10 கோடி கேட்டு வழக்குப் பதிந்தது” குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, “ஹாலிவுட் ரிப்போர்ட்டர்” என்னும் யூடுப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் நயன்தாரா. இதனால் தமிழ்நாட்டில் பல யூடுப் சேனலும் நயன்தாராவிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். “பிஹைண்ட் டாக்கிஸ்” எனும் யூடுப் சேனலுக்கு பேட்டி அளித்தார் சுசித்ரா. இவர் முதலில் நயன்தாரா டாக்குமென்ட்ரி பார்த்துவிட்டு, நயன்தாரா தனுஷ்க்கு எழுதிய கடிதம் குறித்தும், தனுசுக்கும் அவருக்கும் இடையேயான பிரச்சனை குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார். இப்பொழுது நயன்தாரா ‘பாலிவுட் யூடுப் சேனலுக்கு பேட்டியளித்ததை தொடர்ந்து, நயன்தாராவின் மீது அவருக்கு இருக்கும் எண்ணத்தைக் குறித்து இதில் பேசியுள்ளார்’.

அதில் அவர் ‘நயன்தாரா, தனுஷ் இருவருமே பெரிய பண முதலைகள் தான்’. “அவர்களுக்கு 10 கோடி என்பது சாதாரண டிப்ஸ் கொடுக்கும் காசு. ஆனால் அதற்காக நயன்தாரா யூடுப் சேனலில் பேட்டி கொடுத்து அவ்விஷயத்தை பெரிதாக்குவது எதற்காக?” என்றார். தனுஷ்,நயன்தாரா இருவருக்குமே அகங்காரம் உண்டு. நயன்தாரா பேட்டி அளித்ததன் மூலம் “ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடைக்க திட்டமிட்டு இருக்காங்க” என அவர் கூறியிருந்தார். தற்சமயம் ‘பாலிவுட்டில பேட்டி கொடுத்து அவரைப் பேசும் பொருளாக மாற்றி உள்ளார்’. இன்னொன்று ‘தனுஷ் பற்றிய கருத்தை மேலோங்கி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளார்’.

“நயன்தாராவிற்கு சப்போர்ட் செய்த யூடுயுப்பர் நயனுக்கு எதிராக கேள்வி கேட்டதால் அவரைக் குரங்கு என்று சொன்னார் நயன். நான் அவரை சொகுசு பூனை என்று கூறுவேன்? எப்படி ஒரு மனிதனை குரங்கு என்று கூற அவருக்கு உரிமை உள்ளது என்றார்?” அவர் மேலும் “இதுவரை தன் தென்னிந்திய படங்களுக்கு வராத வியுஸை தன் டாக்குமென்டரிக்கு வந்துள்ளதாக மென்சன் செய்து பேசி உள்ளார்” நயன். இது அவர் ‘அகங்காரத்தை’ வெளிப்படுத்தி உள்ளது எனவும் ‘ஆர் ஜே சுசித்ரா’ தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இன்னும் சில யூடுப் சேனல்கள் நயன்தாரா “மூன்று நிமிடம் விளம்பரம் நடிக்க வேண்டும் என்றால் காசு வாங்காமல் வேலை செய்வாரா? அவரது ஆவண படத்தில் தனுஷ் அவர்கள் இயற்றிய நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் மூன்று நிமிடம் தான் வெளியாகி உள்ளது என அவர் கூறுவது நியாயமா?” என தனுஷ் ரசிகர்கள் கேட்பதாகவும் பகிர்ந்து வருகின்றனர்.