நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் குணத்தை அறிய முடியும்!!
சித்திரை
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் முன் கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் மனதில் உள்ள இலட்சியத்தை நிறைவேற்ற அயராது உழைப்பவர்களாக இருப்பார்கள்.
வைகாசி
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். முன் கோபம் கொண்ட இவர்களிடம் சற்று கவனமாக தான் பேச வேண்டும்.
ஆனி
பொதுவாக ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்று ஆசைக் கொள்வார்கள். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இவர்கள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.
ஆடி
எதிர்காலத்தை பற்றி சிறப்பாக திட்டமிடும் இவர்கள் வாழ்வில் வேகமாக முன்னேற வேண்டும் என்று கடுமையாக உழைப்பார்கள்.
ஆவணி
எந்த ஒரு காரியத்தையும் உடனடியாக செய்து விட வேண்டும் என்று நினைக்கும் இவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.
புரட்டாசி
செல்வ செழிப்புடன் வாழப் பிறந்தவர்கள் புரட்டாசி மாதக்காரர்கள். பணத்தை கையாளுவதில் திறமையவர்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள்.
ஐப்பசி
இவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். எதிர்காலத்திற்காக அனைத்தையும் முன்கூட்டியே சேர்த்து வைத்துக் கொள்ளவார்கள்.
கார்த்திகை
இவர்கள் இளமையிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். பொதுவாக கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்கள் என்பதினால் எந்த ஒரு செயலையும் துணிவுடன் செய்ய மாட்டார்கள்.
மார்கழி
எடுத்த காரியங்களில் வெற்றி காண நினைப்பவர்கள் இவர்கள். எதிலும் தனித்தன்மையுடன் விளங்கும் இவர்கள் செலவழிகளாக இருப்பார்கள். எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ளாமல் வாழ நினைப்பவர்கள்.
தை
இவர்கள் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனம் கொண்ட இவர்கள் 1 ரூபாய் செலவழித்தால் 10 ரூபாய் வருமானம் கிடைக்குமா என்று நினைப்பவர்கள். கடமையில் கெட்டிக்காரர்களாக இருந்தால் எதிலும் பொறுமை நிறைந்தால் வெற்றி கிட்டும்.
மாசி
இவர்கள் அதிக கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். எடுத்த காரியங்களில் வெற்றியை ருசிக்கும் இவர்கள் கஞ்ச தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் சரியான திட்டமிடலால் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
பங்குனி
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஏமாந்து போகும் குணமுடையவர்கள். சிறு வயதிலேயே வறுமையை சந்திக்கும் நிலை இவர்களுக்கு ஏற்படும். தீய வழிகளில் செல்லாமல் கடினமாக உழைத்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்..